தம்பி ராமையாவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட தளபதி விஜய்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

thambi ramaiah daughter
thambi ramaiah daughter

Thambi Ramaiah : நடிகர் தம்பி ராமையா தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றவர் இவர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக கூட நடித்துள்ளார் மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், விஜய் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தம்பி ராமையா வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

நடிகனாக முதன் முதலாக மலபார் போலீஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் இந்த திரைப்படம் வெளியாக்கியது 1999 ஆம் ஆண்டு. இதனை தொடர்ந்து மனுநீதி, ஜோ, கோடம்பாக்கம், பம்பர கண்ணாலே, வெற்றிவேல், சக்திவேல், ஆறு, கோவை பிரதர்ஸ், இம்சை அரசன் 23ம் புலிகேசி என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த தம்பி ராமையா மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார் அதே போல் கும்கி, சாட்டை, அப்பா, வினோதய சித்தம் என பல திரைப்படங்கள் துணை கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

தம்பி ராமையாவிற்கு உமாபதி என்னும் மகன் இருக்கிறார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் அவருக்கு அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுடன் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது இந்த தகவல் ஏற்கனவே சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

thambi ramaiah daughter 21
thambi ramaiah daughter 21

இதனைத் தொடர்ந்து தம்பி ராமையா அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் அவரின் பெயர் விவேகா விவேகாவின் திருமணத்திற்கு தளபதி விஜய் அவர்களும் கலந்து கொண்டார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

thambi ramaiah daughter 2
thambi ramaiah daughter 2