ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பி யை ஏற்றிக் கொள்வதற்காக புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வந்தது இந்த நிலையில் கடைசியாக ஐந்தாவது சீசனில் பிக்பாஸ் டைட்டிலை வென்றவர் ராஜி.
அவர் வெற்றி பெற்றதற்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறினார்கள் ராஜிக்கு அடுத்தபடியாக தாமரையை மக்கள் கொண்டாடினார்கள் அவர் மிகவும் கஷ்டப் பட்டவர் அவர் எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் பெரிய இடம் பிடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள்.
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பினார்கள்.பிக் பாஸ் 5 வது சீசனில் எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது ஆனால் இந்த அல்டிமேட் நிகழ்ச்சி அப்படியே ஒளிபரப்பினார்கள். அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை அவர்களும் கலந்துகொண்டார் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை தான் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நடந்ததோ வேறு அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரைக்கு ஜெயிக்கும் வாய்ப்பு இருந்தாலும் அவருக்கு போட்டியாக கடுமையான விளையாட்டை விளையாடியவர் பாலாஜி. பாலாஜி அல்டிமேட் நிகழ்ச்சியின் பட்டத்தையும் வென்றார். இருந்தாலும் தாமரை இறுதிக்கட்டம் வரை போராடி உள்ளார் அதனால் மக்களின் ஆதங்கத்தை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிவடைந்து பலரும் தங்களுடைய வேலையை பார்த்து வருகிறார்கள். அந்தவகையில் சினிமா பிரபலங்கள் பலரும் சினிமாவில் நடிக்க கிளம்பி விட்டார்கள். ஆனால் தாமரை தனது குடும்பம் கலையை தவிர வேறு எதுவும் தெரியாது அதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்த கையோடு மாமியாரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதோ தாமரை தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள்.