தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் உடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது அதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 67 விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் இரண்டாவது திரைப்படம் ஆகவும்.
இவர்கள் இருவரும் இணைந்த முதல் திரைப்படம் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது அதனைத் தொடர்ந்து தளபதி 67 ல் இதே கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் தளபதி 67 திரைப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவ்வபோது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், உள்ளிட்ட ஆறு வில்லன்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக லோகேஸ் கனகராஜ் அவர்கள் கூறியுள்ளார்.
ஆனால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் 6 வில்லன்களில் தளபதி விஜய் தான் மெயின் வில்லன் என்று கூறி வதந்தியை கிளப்பி வருகிறார்கள். ஆனால் நடிகர் விஜய் இந்த படத்திற்கு மெயின் வில்லனாக நடிக்க 90% வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்தவிதமான பதிவையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தல அஜித் நடித்து வரும் ஏ கே 61 திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த இரண்டு படமும் ஒரே தினத்தன்று வெளியாகி ஒன்றுடன் ஒன்று மோத இருக்கிறதாகவும் கூறப்படுகிறது.