தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கின்றன அந்த வகையில் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு சென்டிமென்ட் திரைப்படமாக உருவாக்கி வருகிறது. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூரில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படம் அடுத்த வருடம் பொங்களை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படி இருக்க இந்த படத்தின் சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போதே தளபதி விஜய் இளம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்கப் போகிறார் என சொல்லப்பட்டது.
மேலும் அட்லி ஷாருக்கான் விஜய் ஆகிய மூவரும் இணைந்திருந்தனர். இதனால் இவர்கள் இணைவது கன்ஃபார்ம் என்று நம்பினார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் இந்த செய்தியை பெரிய அளவில் கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால் அந்த ஆசை தற்போது மண்ணோடு மண்ணாகி உள்ளது ஆம் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் .. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் தளபதி விஜய் நடிக்கவில்லையாம் அது ஒரு வதந்தி என தற்பொழுது கூறப்படுகிறது இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருக்கின்றனர்.