சிம்புவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த “தளபதி விஜய்”.. பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யம்

simbu-
simbu-

நடிகர் சிம்பு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்த காடு போன்ற படங்கள் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்தன அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இயக்குனர் கிருஷ்ணாவுடன் கூட்டணி அமைத்து பத்து தல..

திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் சிம்பு சூப்பராக நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது அதை உறுதிப்படுத்தும் வகையில் டீசர், ட்ரைலரில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் தெரிந்தது. படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரே ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தில் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன் ப்ரியா பவானி சங்கர், redin kingsley, அனுசித்ரா.. மற்றும் பல முன்னணி பிரபலங்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து உள்ளனர் படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பத்து தல இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் படத்தில் நடித்த பிரபலங்களையும்  தாண்டி மற்ற திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர். நடிகர் சிம்பு வந்த உடன் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

அதில் சிம்புவை பற்றி பல திரையுலக நட்சத்திரங்கள் பேசியதை ஒரு தொகுப்பாக போட்டு காட்டினார் அப்படித்தான் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சிம்பு குறித்து தளபதி விஜய்  இருந்தார். அந்த வீடியோவை பத்து தல இசை வெளியீட்டு விழாவில் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டது அந்த வீடியோவை சிம்பு உத்து கவனித்தார் அதன் வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.