சோள முத்தா போச்சா.. மொத்த தகவலையும் வெளியே கசிய விட்ட தளபதி 68 டீம்.?

Thalapathy 68
Thalapathy 68

Thalapathy 68 upadate : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருவர் தளபதி விஜய். இவர் லோகேஷ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ரீலிஸ் – க்கு முன்பே  பல கோடி வசூல் அள்ளி மாஸ் காட்டி வருகிறது இந்த படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்

இது குறித்து அமெரிக்காவுக்கு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர், வெங்கட் பிரபு ஆகியவர்கள் நேரில் சென்று பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தளபதி 68 படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் கலந்த ஒரு என்டர்டைன்மென்ட் படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில் தளபதி 68 குறித்து நமக்கு சில தகவல்கள் கிடைத்திருக்கிறது

அதாவது வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி படத்தின் பூஜை போடப்பட்டு மறுநாளே ஷூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் தான்.. பாடலுக்காக மட்டும் வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது மேலும் வெங்கட் பிரபுவின் சிக்னேச்சர் ஸ்டைலில் எடுக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் கூட போய் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றன. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள்  தளபதி 68 க்கு மரண வெயிட்டிங் என கூறிய கமாண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.