Vijay Son: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தினை இயக்க இருக்கும் நிலையில் இதன் மூலம் இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமாகிறார். மேலும் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமானின் மகன் அமீன் தான் இசையமைக்க வேண்டும் என சஞ்சய் விரும்புகிறாராம்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். அப்படி இவருடைய நடிப்பில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்க லியோ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். ஜேசன் சஞ்சய் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருந்தார். இவரும் தந்தையைப் போல நடிகராக தான் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜேசன் சஞ்சய் இயக்குனருக்கான படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது தனது முதல் படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். சில மாதங்களாகவே ஜேசஸ் சஞ்சய் குறித்து ஏராளமான தகவல்கள் வெளியான நிலையில் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக முன்னணி நடிகர்கள் வாரிசு நடிகர்களாக தான் அறிமுகமாகி வருகின்றனர். அப்படி விஜய்யின் மகனும் நடிகராக அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இவர் இயக்குனராக களமிறங்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
இயக்குனருக்காக வெளிநாடுகளில் சென்று தேர்ச்சி பெற்ற ஜேசன் சஞ்சய் சில நாட்களுக்கு முன்பு லைக் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் குறித்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியானது. இதனைத் தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் ஹீரோவாக யார்? நடிக்கப் போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஒரு சிலர் விஜய் சேதுபதி தான் சஞ்சய் பத்தில் நடிக்க போகிறார் கூறுகின்றனர். மேலும் கவினும் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இந்த சூழலில் ஜேசன் சஞ்சய் இயக்கப் போகும் படத்திற்கு ஏ.ஆர் ரகுமானின் மகன் அமீன் தான் இசையமைக்க வேண்டும் என கூறியிருக்கிறாராம். ஆனால் லைக்கா நிறுவனம் அனிருத் இசையமைக்கலாம் என்கின்றார்களாம். தற்பொழுது யார் இந்த படத்திற்கு இசையமைக்க போகிறார்கள் என்ற பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.