தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாக போகும் திரைப்படம் தான் வாரிசு இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவானது மட்டும் இல்லாமல் இதனை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜி என்பவர் தயாரித்துள்ளார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை முக்கிய இடங்களில் ரிலீஸ் உரிமையை பிரபல உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலமாக வெளியிட உள்ளார் இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் எப்பொழுது வெளியாகும் என மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.
ஏனெனில் பொதுவாக தளபதி விஜய் மேடையில் பேசும் பொழுது மறைமுகமாக அரசியல் பேசுவது வழக்கம்தான் அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள் பெரிதும் பார்த்துக் கொண்டிருப்பது விஜயின் ஸ்பீச்காகதான் இந்நிலையில் இந்த இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
மேலும் இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டாலும் பத்திரிகையாளர்கள் யாருக்கும் இந்த விழாவில் அனுமதி இல்லாமல் அவமதிக்கப்பட்டார்கள் அதற்கு காரணம் இசை வெளியீட்டு விழாவை முழுக்க முழுக்க சன் டிவி தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்ப இருப்பதன் காரணமாக தான் இந்த வீடியோ எதுவும் வெளியில் கசிந்து விடக்கூடாது என்று இப்படி ஒரு செயலை செய்துள்ளார்கள்.
இதனால் பத்திரிக்கை துறையை சேர்ந்த பலரும் தளபதி விஜய் மிகுந்த வருத்தத்தில் இருப்பது மட்டுமில்லாமல் தளபதி விஜயின் திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து பல பிரச்சனையை சந்தித்து வருகிறது ஆனால் அவருக்கு அந்த நேரத்தில் இருந்து ஆதரவாக இருந்தது எனவோ பத்திரிகையாளர்கள் தான்.
மேலும் இந்த திரைப்படத்தை எல்லா வகையிலும் விளம்பரம் செய்வது மட்டும் இல்லாமல் திரைப்படம் தற்போது ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் பத்திரிக்கையாளர்கள் ஆகவே அவர்களை புறக்கணிப்பது மிகவும் தவறான விஷயம் என பத்திரிகையாளருக்கு தகுந்த பதில் கொடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
மேலும் நாங்கள் இல்லாவிட்டாலும் அங்கு கலந்து கொண்ட பல ரசிகர்களும் செல்போனில் வீடியோ எடுக்க தான் போகிறார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் பத்திரிகையாளர்களை மட்டும் புறக்கணிப்பது ஏன் என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.