ட்விட்டர் கணக்கில் கடைசி இடத்தை பிடித்த தளபதி விஜய் – முதல் இடத்தில் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர்  நடிக்கும் திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தால்  கூட அவரது லெவலுக்கு 200 கோடி வசூல் அள்ளி விடுகின்றன இதனால் இவரை வைத்து படம் பண்ண தற்பொழுது பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்பொழுது விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில்  விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது இந்த படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு  அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

அதாவது சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம், வீடியோக்கள் மற்றும் படத்தின் அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுகின்றனர் இதன் மூலம் அதிக  நடிகர்கள் தக்கவைத்திருக்கின்றனர். அப்படி டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் அதிக பாலோயர்களை  வைத்திருக்கும் நடிகர்கள் யார் என்பது குறித்து தகவல் வந்துள்ளது.

அதன்படி பார்க்கையில் ஒன் இந்தியா தமிழ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது முதல் இடத்தில் இருப்பவர் மகேஷ் பாபு இவர் 13 மில்லியன் ஃபாலோசனை வைத்துள்ளார் அடுத்ததாக தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், அல்லு அர்ஜுன் என இருக்கிறார்கள்  கடைசி இடத்தில் தளபதி விஜய் இருக்கிறார் இவரை 4 மில்லியன் பேர் ட்விட்டர்   பக்கத்தில் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.