ஆக்சன் படத்தை தவறவிட்ட “சூப்பர் ஸ்டார்” சரியான நேரம் பார்த்து கெட்டியாக பிடித்து தளபதி விஜய்..!

rajini and vijay
rajini and vijay

தளபதி விஜய் அண்மைக்காலமாக  ஆக்சன் திரைப்படங்களை பெரிதும் தேர்வு செய்து நடித்து வருகிறார் இந்த படங்களும் அவருக்கு வெற்றி மேல் வெற்றியை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் அவரது ரசிகர்கள் ஒரு மாறுதலுக்கு நீங்கள் காதல் சம்பந்தப்பட்ட மற்றும் வித்தியாசமான படங்களில் நடிக்கலாமே என கேட்டாலும் விஜய்க்கு தற்போது அதில் ஆர்வம் இல்லை என தெரிய வருகிறது.

தளபதி விஜய் இப்பொழுது கூட தனது 66 வது படமான வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தாலும் அதில் ஆக்ஷன் பெருமளவு இருக்கும் என தெரிய வருகிறது. வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளன.

அதாவது சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் சில காரணங்களால் சூப்பர் ஹிட் படத்தை கூட தவறவிடுவார்கள் அதை மற்றொரு நடிகர் கெட்டியாக பிடித்துக் கொண்டு சினிமா பயணத்தை ஆரம்பித்து விடுவார்கள் அப்படித்தான் விஜய்க்கும் நடந்து உள்ளது. தளபதி விஜய் ஒரு கட்டத்தில் காதல் மன்னனாகத்தான் வளம் வந்தார்.

அதன் பிறகு பகவதி படத்தின் மூலமாக ஆக்ஷன் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார் என்பது நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் முதலில் பகவதி படத்தின் கதை விஜய்க்கு போகவில்லையாம்.. பகவதி படத்தின் இயக்குனர் ஏ வெங்கடேசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகவதி திரைப்படத்தின் கதையை ரஜினியை நினைவில் வைத்து தான் எழுதினேன்.

அதாவது ரஜினிக்காகத்தான் பகவதி ஸ்கிரிப்ட் தயார் செய்ததாகவும் ஆனால் ரஜினியை நேரில் சந்திக்க முடியவில்லை பின்னர் விஜயை சந்தித்து இந்த ஸ்கிரிப்ட்டை கூறினேன் அவர் முதலில் தனக்கு ஆக்சன் வருமா என யோசித்தார் பின் தயக்கம் காட்டினாலும் போகப்போக சிறப்பாக நடித்து அசத்தினார். பகவதி படம் பின் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.