தல பட ரிங்க்டோனை வைத்திருந்த தளபதி விஜய்.! சீக்ரெட் உடைத்த பிரபல நடிகர்.!

ajith-vijay
ajith-vijay

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர் தல மற்றும் தளபதி. இவர்கள் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், மேலும் இவர்களின் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கில் பாலபிஷேகம், கட்டவுட், வெடி, ஆர்ப்பாட்டம் செய்வார்கள் ரசிகர்கள்.

தல மற்றும் தளபதி ரசிகர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை. அதனால் அடிக்கடி சமூகவலைத்தளத்தில் சண்டை போட்டுக் கொள்வார்கள், ஆனால் நிஜ வாழ்க்கையில் தல, தளபதி அப்படி இல்லை என பலரும் கூறுகிறார்கள். தற்போது முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு தல, தளபதியுடன் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அப்பொழுது ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

யோகி பாபு அவர்கள் கூறியதாவது தல படத்தை முடித்துவிட்டு தளபதி படத்திற்கு சென்றபொழுது, தளபதி விஜய் அவர்கள் அஜித் எப்படி இருக்கிறார் என்று முதல் வார்த்தை கேட்பாராம் அதேபோல் அஜித் அவர்கள் தளபதி பற்றி கேட்பாராம்.

விஜயுடன் பல திரைப்படங்களில் நண்பராக நடித்த நடிகர் தாமு ஒரு சீக்ரெட் பற்றிக் கூறியுள்ளார், தல அஜித் திரைப்படத்தில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் பில்லாவும் ஒன்று பில்லா திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது இன்றும் பில்லா திரைப்படத்தில் உள்ள தீம் மியூசிக்கை யாராலும் மறக்க முடியாது, இந்த நிலையில் பில்லா தீம் மியூசிக்கை தளபதி விஜய் அவர்கள் ரிங்டோனாக வைத்திருந்தாராம் இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.

தல மற்றும் தளபதி விஜய் அவர்கள் இன்றளவும் எந்த ஒரு போட்டியும் பொறாமையும் இல்லாமல் நண்பர்களாக இருக்கிறார்கள், அதேபோல் தல மற்றும் தளபதி ரசிகர்கள் இணைந்துவிட்டால் இருவருக்கும் மகிழ்ச்சி தான். ஆனால், அது சாத்தியமே இல்லை அதேபோல் பொதுவான ஒரு பிரச்சினை வந்துவிட்டால் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.