விமான நிலையத்தில் மக்களோடு மக்களாக நின்ற தளபதி விஜய் – இணையதளத்தை கலக்கும் வீடியோ மற்றும் புகைப்படம்.!

vijay

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருபவர் நடிகர் விஜய். காரணம் தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் இப்பொழுதும் தொடர்ந்து படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது இது விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என பட குழு திட்டவட்டமாக சொல்லி உள்ளது இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்கிறார்.

தமன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார் இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ஜெயசுதா, குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், சரத்குமார், எஸ். ஜே. சூர்யா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க மறுப்பாக்கம் விஜய் பற்றிய செய்திகள் இணையதள பக்கத்தில் வேகம் எடுத்து வருகின்றன.

அண்மையில் கூட நடிகர் சரத்குமார் விஜய் குறித்தும் வாரிசு படம் குறித்தும் பேசி இருந்தார் இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஏர்போட்டியில் மக்களோடு மக்களாக நின்று உள்ளார் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

vijay
vijay

புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்த தளபதி ரசிகர்கள் நடிகர் விஜய்யா மக்களோடு மக்களாக மிக சாதாரணமான வரிசையில் நிற்கிறாரே என கூறி புகைப்படத்தை பார்த்து லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.