தளபதி விஜய் லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.
விஜய் என்னதான் வாரிசு நடிகராக சினிமாவில் கால் தடம் பதித்தாலும் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் திரையுலகில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார் அதை யாராலும் மறுக்க முடியாது.
தளபதி விஜய் தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார், ஆம் மாஸ்டர் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார் அவர் உடல் நலக் கறைவால் இரண்டு வயதிலேயே இறந்துவிட்டார்.
அவரின் இழப்பு விஜயால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அன்றிலிருந்து இன்றுவரை விஜய்க்கு தன்னுடைய தங்கையை மிகவும் பிடிக்கும், தனது தங்கை இறந்த பிறகு விஜய் மிகவும் அமைதியாக மாறிவிட்டார் இதை பலமுறை விஜயன் குடும்பத்தார் கூறி கேட்டுள்ளோம்.
இரண்டு வயதிலேயே இறந்து விட்டா விஜய்யின் தங்கை வித்யாவை பலருக்கு தெரியாது, பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் விஜய்யின் தங்கை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ முதன்முதலாக வெளியான விஜய்யின் தங்கை புகைப்படம்.
Thalapathy @actorvijay's Sister rare pic HD. #Master pic.twitter.com/4H5QwmzBkg
— Vijaysm (@VijaysmKL) September 13, 2020