உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதிகளில் மதிய உணவு வழங்கும் தளபதி விஜய்.! மேலும் எத்தனை மாநிலங்களில் தெரியுமா.? முயற்சியினை பாராட்டும் ரசிகர்கள்..

vijay-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் தன்னால் முடிந்த தொண்டுகளை தனது ரசிகர்கள் மூலம் மக்களுக்கு செய்து வருகிறார்.

அந்த வகையில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டுமே 28ஆம் தேதி அன்று உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அன்றைய தினத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மக்களுக்கு மதிய உணவு அளிக்க தளபதி விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இவ்வாறு இதன் மூலம் தமிழ்நாட்டில் பசி பட்டினியை போக்கும் வகையில் ஒரு ஆரம்ப முயற்சியாக அமைய இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்பொழுது இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகம் முழுவதும் மே 28ஆம் தேதி “உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது.

உலக அளவில் நீண்ட கால பட்டினியால் வாடும் மக்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. தளபதி அவர்களின் சொல்லுக்கு இணங்க உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையாகாம் திட்ட மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் இந்த நலப்பணி செய்யப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vijay 4
vijay 4