தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து வாரிசு கடுமையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். நடிகர் விஜய் அவர்கள் கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து குடும்ப செண்டிமெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளது குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல எதிர்ப்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் வெளிவருவதற்கு முன்பு பலவிதமாக பிரமோஷன் செய்து வந்த விஜயின் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் தனது அப்பா சந்திரசேகர் மற்றும் அம்மாவிடம் பேசுவது கிடையாது என்றும் ஊருக்கு அறிவுரை சொல்லும் விஜய் தனது குடும்பத்திற்கு ஏன் இப்படி செய்கிறார் என்று பல விமர்ச்சனங்கள் இருந்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் நடிகர் விஜய் அவர்கள் தனி மனிதனாக சென்று வருவதால் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டாரா என்றும் கூட விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா தனது மகன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் அவர் திரும்பி வருவதற்குள் இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டார்கள் என்று கூறி வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் நடிகர் விஜய் அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது நடிகர் விஜய் நடிப்பில் உருவாக்கி உள்ள வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதை ரசிகர்களுடன் சேர்ந்து ஜாலியாக பார்க்க தனது மனைவியுடன் சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்ட திரையரங்கத்திற்கு வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனது மனைவியுடன் ஜாலியாக வாரிசு படத்தையும் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் விஜய் மீது போடப்பட்ட விவாகரத்து பழியை ஒரேடியாக துடைத்து விட்டார் நடிகர் விஜய். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களிடமும் வைரலாகி வருகிறது.