Actor Vijay: கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட இருக்கும் நிலையில் அதற்கான அடுத்தக் கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளார். மேலும் வாக்குறுதி கொடுத்தது போலவே நூலகம் திறப்பதற்கான பணியை தொடங்கி இருக்கும் நிலையில் ரசிகர்கள் விஜய்யை கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் விஜய் விரைவில் அரசியலில் ஈடுபடுவதாக சமீப காலங்களாகவே தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. அப்படி தனது மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நலத் தொண்டுகளை செய்து வருகிறார்.
வாரிசு திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சொல்லும் அளவிற்கு பூர்த்தி செய்யவில்லை எனவும் விமர்சிக்கப்படுகிறது.
இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்து வரும் நிலையில் இதற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விஜய் படங்களில் நடித்து வந்தாலும் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் நலத்தொண்டுகள் செய்வதில் ஆர்வம் காமித்து வருகிறது.
சூப்பர் ஹிட் படங்களை மிஸ் செய்த 5 தமிழ் நடிகைகள்.. கிளாமருக்கு பயந்து அஜித் படத்தை தவறவிட்ட ஹீரோயின்
அந்த வகையில் காமராஜர் பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்கத்தினர் இரவு நேர பாடசாலைகளையும், விஜய் நூலகங்களை தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் நூலகத்தை திறப்பதாக அறிவித்தனர். இந்த வகையில் தற்பொழுது விஜய் மக்கள் இயக்கத்தினர் நூலகம் திறப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த நூலகத்தில் எப்படிப்பட்ட புத்தகங்கள் இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நூலகம் மட்டுமில்லாமல் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், ஏழை எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நல உதவிகள் செய்து வருவதனால் இதன் மூலம் விஜய் மக்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார். லியோ படத்தின் வெற்றி விழாவில் 2024ல் கப்பு முக்கிய பிகிலு என விஜய் கூறியதனால் அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.