ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே , ஆகியவர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கோமாளி இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். முதல் திரைப்படத்திலேயே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார் அதனால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது.
தான் இயக்கிய முதல் திரைப்படம் ஹிட்டடித்ததால் அடுத்ததாக ஹீரோவாக நடிக்க போகிறேன் என அறிவிப்பை வெளியிட்டார் அதற்கு பலரும் எதற்கு தேவையில்லாத வேலை என கமெண்ட் செய்தார்கள் ட்ரோல் செய்தார்கள். ஆனாலும் பிரதீப் ரங்கநாதன் விடாமுயற்சியால் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என அறிவித்து லவ் டுடே என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்தத் திரைப்படத்தில் பிரதீப் ரங்க நாதனே ஹீரோவாக நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் ஹீரோயினாக இவானா நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் இன்றைய காலகட்ட இளைஞர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்.
படமும் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை எட்டியது. தற்பொழுது முழு நேர ஹீரோவாக மாறிவிட்டார் இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பிரதீப் ரங்கநாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சில படங்களை இயக்குவதற்காக. அந்த சமயத்தில் விஜய் பட ஆபர் கிடைத்தது அதனால் அர்ச்சனா கல்பாத்தி முதன் முதலில் பிரதிப் ரங்கநாதனிடம் விஜய் படத்தை இயக்குறிங்களா என கேட்டுள்ளார் அதற்கு ஐ எம் வெரி பிசி என ஒரே போடாக போட்டுவிட்டார்.
அப்படி இருக்கும் நிலையில் தளபதி 68 திரைப்படம் அதனால் தான் வெங்கட் பிரபுவுக்கு சென்றுள்ளது முதலில் பிரதீப் ரங்கநாதன் இயக்க கேட்டுள்ளார்கள் ஆனால் அவர் மறுத்து விட்டதால் தான் வெங்கட் பிரபுவுக்கு இந்த ஆஃபர் கிடைத்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் ஏன் மறுத்துள்ளார் என்ற விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இனி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என முடிவு செய்துள்ளார்.
மேலும் பிரதீப் நாங்க ரங்கநாதன் தான் இயக்கும் திரைப்படத்தில் தானே ஹீரோவாக நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம். இப்படி லட்டு மாதிரி விஜய் திரைப்படம் கிடைத்தும் வேண்டாம் என மறுத்துள்ளது கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சு பொருளாக மாறி உள்ளது.