தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்பொழுது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்கி வருகிறார் இதற்கு முன்பு கனகராஜ் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியவர்.
லோகேஷ் கனகராஜ் கடைசியாக கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் திரைப்படத்தை இயக்கி வருகிறார் அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரண்டு மடங்காக ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல் லியோ திரைப்படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து பலரின் கேள்வியாக இருப்பது எல் சி யு வா இல்லையா என்று தான். இதைத்தான் பல ரசிகர்கள் லியோ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களிடம் கேட்டு வருகிறார்கள்.
ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலும் நடிகர்கள் வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள் அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த திரிஷா அவர்களிடம் விழாவில் கலந்து கொண்ட போது அவரிடமும் இதே கேள்வியை ரசிகர்கள் கேட்டார்கள் ஆனால் திரிஷா இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டார். இந்த கேள்விக்கு படம் வெளியான பின்னரே பதில் தெரிய வரும்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் படத்தைப் பற்றிய விஷயம் நாளுக்கு நாள் வெளியாகி கொண்டே இருக்கிறது சமீபத்தில் கூட மன்சூர் அலிகான் மற்றும் அர்ஜுன் ஆகியவர்கள் விஜயுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்தது. ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்கள் அதனால் இவர்கள் இருவரும் படத்தில் நடிக்கிறார்களா இல்லையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
ஆனால் சமீபகாலமாக இவர்கள் இருவரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருகிறார்கள் இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. விஜய் அர்ஜுன் மன்சூர் அலிகான் ஆகியவர்களின் காம்போவை ரசிகர்கள் திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் விஜய் மற்றும் அர்ஜுன் சம்பந்தப்பட்ட சண்டை காட்சிகள் சென்னையில் மிகப் பெரிய செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது இந்த கடைசி சண்டை காட்சி ஏர்போர்ட் செட் அமைத்து கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சண்டைக் காட்சியில் மன்சூர் அலிகான் அவர்களும் விஜயுடன் இணைந்து நடிப்பார் எனவும் தகவல் கிடைத்துள்ளது மன்சூர் அலிகான் கதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவார் எனவும் கூறப்படுகிறது.