இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடன் கூட்டணி அமைத்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள் தான். அந்த வகையில் ஆடுகளம், பொல்லாதவன், அசுரன், வடசென்னை போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் சூரி ஹீரோவாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து வருகின்றனர் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி பயணிக்கிறது அதனால் கூடிய விரைவில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ரிலீஸ் க்கு தயாராகும் என தெரிய வருகிறது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவுடன் கைகோர்த்து வாடிவாசல் எனும் படத்தை இயக்க உள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஜய்யை சந்தித்து வெற்றிமாறன் ஒரு ஒன் லைன் ஸ்டோரி ஒன்றை சொல்லி சில மாதங்களுக்கு முன்பு கூறி உள்ளார். அந்த கதை விஜய்க்கு ரொம்ப பிடித்து போகவே கதையை டெவலப் பண்ண சொல்லி இருந்தாராம். வெற்றிமாறனும் கதையை முழுவதும் முடித்து விட்டார்.
ஆனால் இவர்களது கூட்டணி இப்பொழுது உருவாக சாத்தியமில்லை. ஏனென்றால் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர் விஜய் லோகேஷ் உடன் கைகோர்த்து அவரது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். மறுபக்கம் வெற்றிமாறன் கையிலும் ஒரு சில படங்கள் இருப்பதால் இதையெல்லாம் முடிக்கவே இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் ஆகும்.
இந்த நிலையில் விஜய் மற்றும் வெற்றிமாறன் இருவரும் தனித்தனியே பிஸியாக இருந்து வருவதால் இவர்கள் இருவரும் இணைய சில காலங்களாகும் என தெரிய வருகிறது. அதற்கேற்றார் போல் விஜய்யும் சிறிது காலம் காத்திருங்கள் என வெற்றிமாறன் இடம் கூறியுள்ளார். இது வெற்றிமாறனுக்கு மிகுந்த ஏமாற்றமாகியுள்ளது. இருந்தாலும் இந்த கூட்டணியை ரசிகர்கள் வேற லெவலில் எதிர்பார்த்து வருகின்றனர்.