ஜேசன் சஞ்சய் படத்தில் கவின் நடிப்பதற்கு முக்கிய காரணமே தளபதி தான்.! அப்படி விஜய் என்ன கூறினார் தெரியுமா.?

vijay
vijay

Vijay: நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் நிலையில் இவருடைய முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். அப்படி ஜேசன் சஞ்சயின் முதல் படத்தில் கவின் ஹீரோவாக நடிப்பதற்கு நடிகர் விஜய் தான் காரணம் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குழந்தை பருவத்தில் இருந்தே தனது அம்மாவழி தாத்தா பாட்டியுடன் தான் வளர்ந்து வருகிறார். அப்படி லண்டனில் தான் தனது இயக்குனருக்கான படிப்பை மொத்தத்தையும் முடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் ஆடுங்கடா என்ன சுத்தி பாடலில் தனது தந்தையுடன் இணைந்து நடனமாடியிருந்தார்.

அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இவர் லண்டனில் இயக்குனருக்கான படிப்பை படித்து முடித்தார். படிப்பு முடிந்தவுடன் குறும்படங்களை இயக்கி வந்த ஜேசன் சஞ்சய் தற்பொழுது தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவ்வாறு இவருடைய அறிமுகம் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனம் லைக்கா தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் ஒப்பந்தமும் கையெழுத்து போடப்பட்டது.

அது குறித்த புகைப்படங்களை லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஜேசன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி தான் என ஷோபா, எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறினார்கள். எனவே முதல் படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிப்பாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின்படி இவரது படத்தில் கவின் தான் நடிக்க உள்ளார் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதற்குக் காரணம் விஜய் தான் எனவும் கூறப்படுகிறது. அதாவது, ஜேசனுக்கு முதல் படம் என்பதால் எந்த ஒரு தவறான விமர்சனங்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அப்படி விமர்சனங்கள் வந்தால் அது வருங்காலத்திற்கு பிரச்சினையாக இருக்கும் என விஜய் கூறினாராம். எனவே இதன் காரணமாக தனது தந்தை சொன்னபடியே ஜேசன் சஞ்சய்யும் முடிவெடுத்துள்ளார்.

சமீப காலங்களாக கவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வரும் நிலையில் தவறான விமர்சனங்களை பெறாத என விஜய் நினைத்து ஜேசனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு ஏ.ஆர் மகன் இசையமைப்பாரா, அனிருத் இசையமைப்பாரா என்பது முடிவு செய்யப்படவில்லை.