தளபதி விஜய் தற்பொழுது வாரிசு என்ற திரைப்படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் இந்த திரைப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கி வருவது மட்டுமில்லாமல் இதில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சரத்குமார், ராதிகா, போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
மேலும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிக அதிக அளவு எதிர்பார்ப்பை உருவாக்கியது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சரத்குமார் அவர்கள் விஜயை பற்றி ஒரு சுவாரசியமான விஷயத்தை பேசி உள்ளார் அப்போது அவர் கூறியது என்னவென்றால் பல வருடங்களுக்கு முன்பாகவே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வருவார் என்று கூறினேன்.
அந்த வகையில் அவர்களுக்கு ரசிகர் கூட்டத்தை பார்த்தால் அதை உண்மையாக ஆகா அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பல சுவாரஸ்யமான சம்பவத்தையும் அவர் நினைவு ஊட்டி உள்ளார். அந்த வகையில் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் தேவயானி நடித்த சூரியவம்சம் திரைப்படம் மிகப் பெரிய அளவு வெற்றியை பெற்றது அது மட்டும் இல்லாமல் 175 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து அந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஒரு விழா நடத்தப்பட்டது அந்த விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் அப்பொழுது சரத்குமார் அவர்கள் மேடையில் பேசும்பொழுது இனி வரும் காலங்களில் தளபதி விஜய் தான் சூப்பர் ஸ்டாராக இருப்பார் என கூறியுள்ளார்.
இவ்வாறு இதை பார்த்த பலரும் நீங்கள் அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறீர்கள் இந்நிலையில் வேறு ஒரு நடிகரை நீங்கள் எப்படி சூப்பர் ஸ்டார் என்று கூறலாம் என சரத்குமார் இடம் கேள்வி எழுப்பி உள்ளார்கள். ஆனால் நடிகர் சரத்குமார் நான் என் மனதில் பட்டதை கூறி உள்ளேன் என்று கூறினார்.