தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். தனது நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். சமீபகாலமாக தளபதி விஜய் அவர்கள் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த கத்தி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனையடுத்து அவர் தற்பொழுது இளம் இயக்குனரான லோகேஷ் கனராஜ்வுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது இருப்பினும் இதுவரையிலும் ட்ரைலர் வெளிவருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் விஜயை பற்றிய செய்திகளை தினந்தோறும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் விஜய் தனது நண்பர்களுடன் கடந்த 2014-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற பொழுது எடுத்த போட்டோவை விஜயின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த போட்டோவில் அனைவரும் வித்தியாசமான ஜமுக்காளம் மற்றும் தொப்பிகள் அணிந்தவாறு போஸ் கொடுத்தனர்.அத்தகைய போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.