விமர்சனம் செய்தவர்களுக்கு தனது வீட்டு வாசலில் சரியான பதிலடி வைத்துள்ள தளபதி விஜய்..! இனிமேல் வாய் திறப்பாங்களா..?

vijay-angry

தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பது உண்மை.

எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தற்பொழுது தளபதி விஜய் அவர்கள் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்துள்ளார் அந்த வகையில் இவர்களுடைய கூட்டணியில் தற்பொழுது பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம் தான் வாரிசு இந்த திரைப்படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி  ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இவ்வாறு உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நான்காம் கட்ட படப்பிடிப்பு பைசாக்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. பொதுவாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் வெளியான பொழுது பல்வேறு மதப் பிரச்சினைகள்  உருவானது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

vijay h
vijay h

அதுமட்டுமில்லாமல் இதன் மூலமாக பல்வேறு விமர்சனங்களையும் தனிப்பட்ட முறையில் விஜய் சந்தித்துள்ளார் மேலும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் பொழுது அவர் கொடுத்த பேட்டியில் இயேசு பிள்ளையார் அல்லா என மூவரையுமே நான் வணங்குவேன் என்று கூறியிருந்தார்.

vijay home-2

மேலும் இவற்றை உண்மையாக்கும் வகையில் தனது வீட்டின் வாசலில் பிள்ளையார் மற்றும் அம்மன் சிலையை வைத்தது மட்டும் இல்லாமல் பலருடைய மூஞ்சில் கறியை பூசும் அளவிற்கு தளபதி விஜயின் செயல் அமைந்துள்ளது என்றே சொல்லலாம் இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் அவற்றை புகைப்படமாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

vijay home-1