விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் Goat த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.. இந்த படத்தில் இவருடன் இணைந்து பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, யோகி பாபு போன்ற பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக ஒரு காலத்தில் கொடி கட்டி பரந்த நடிகர் சாக்லேட் பாய் பிரசாந்த் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருவது ரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் பொங்கலுக்கு வெளியானது. பிரபுதேவா, பிரசாந்த், விஜய், அஜ்மல் என அனைவரும் கன்னுடன் மாசாக சிரித்தபடி நின்றனர். மேலும் இந்த போஸ்டர் Meet The Goat squad என்ற கேப்ஷனுடன் வெளியாகி விஜய் ரசிகர்களை கவர்ந்தது.
அஜித்திற்கு மங்காத்தாவில் ஆடாமல் ஜெயிச்சோமடா என்ற பாடல் போன்று யுவன் இசையில் செம்ம பார்ட்டி மோட் பாடல் ஒன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் விஜய்க்கு உருவாகியுள்ளது என கூறியுள்ளார்கள்.மேலும் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் மற்றும் பிரபுதேவா இவர்களின் நடனத்தை பற்றி சொல்லவே வேண்டாம். மேலும் இந்தப் பாடலில் டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பு மட்டுமில்லாமல் டான்ஸ் ஜிம்னாஸ்டிக் என பல திறமைகளை காட்டி விஜயயே மிரட்டி யுள்ளாராம். மேலும் விஜய் சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பே டாப் ஸ்டார் பிரசாந்த் சினிமா துறையில் நம்பர் ஒன்னாக இருந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்தது தான். அது மட்டுமல்லாமல் டாப் ஸ்டார் பிரசாந்த் அழகு, ரொமான்ஸ், டான்ஸ், ஃபைட் என அனைத்திலும் ஆல்ரவுண்டராக இருந்தார்.
மீனாவின் தம்பியிடம் வசமாக சிக்கிய ரோகினி.! இந்த முறை டிராமா வெளிப்படுமா..
இந்த திரைப்படத்தில் அவர் மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்ததன் மூலம் இனிமேல் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.