இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான். அந்த வகையில் இவர் இதுவரை ராஜா ராணி, பிகில், மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கி உள்ளார் இந்த அனைத்துமே நல்ல வசூலை அள்ளி சாதனை படைத்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் அவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களை வைத்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு புதிய கதை ஒன்றை சொல்லி அங்கு கமிட்டானார் ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அப்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க முடியாமல் இருந்தது.
இதனால் படம் கைவிடப்பட்டது என பல விஷயங்கள் பேசப்பட்டது. ஷாருக்கான் இந்த படத்தில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டியதால் அனைத்து பிரச்சினைகளையும் முடித்துவிட்டு அட்லீ உடன் இணைந்து தற்போது நடித்து வருகிறார் இந்த படத்திற்கு ஜவான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் படம் திரையரங்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் கைகோர்த்து நயன்தாரா பிரியாமணி, சானியா மல்கோத்ரா, யோகி பாபு, ரானா ரகுபதி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் அட்லி மற்றும் விஜய் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் அதிகம் அட்லிக்கு முன்னுரை கொடுப்பதாக கூறப்படுகிறது.
அது ஏனென்றால் நடிகர் விஜய் ஒரு காட்சியில் நடந்து வந்தால் 8 கேமராவை வைத்து விடுவாராம் அட்லீ ஒவ்வொரு சைடுல இருந்தும் ஒவ்வொரு ஷார்ட்டுகள் எடுக்கப்படுமாம் சைடு, முன்னாடி, பின்னாடி என அனைத்தையும் அவர் நடந்து வருவதிலேயே எடுத்து விடுவாராம் இதனால் படத்தின் நேரம் குறையும் ஹீரோவும் அதிகம் நடிக்க வேண்டியது இல்லையாம் இதை அட்லீ செய்வதால் விஜய்க்கு ரொம்ப பிடித்து போய் உள்ளதாம் அதனால் தான் விஜய்அட்லிக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்ததோடு இனி வருகின்ற படங்களிலும் அட்லீக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார் எனவும் கூறப்படுகிறது.