தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது படத்தில் நடித்து விட வேண்டும் என பல இளம் நடிகர் நடிகைகள் ஆசைப்படுவது வழக்கம் ஆனால் அது யாரோ ஒருவருக்கு தான் நடக்கும். அப்படி விஜய் உடன் நடித்த ஒரு சில இளம் நடிகர், நடிகைகள்..
தற்போது தமிழ் சினிமா உலகில் நல்ல பட வாய்ப்புகளை கைப்பற்றி ஓரளவு டீசன்டாக ஓடுகின்றனர். விஜய் உடன் படங்களில் நடிக்கும் போது இளம் நடிகர் நடிகைகளுக்கு பல அட்வைஸும் கொடுப்பாராம் அந்த வகையில் தளபதி விஜய் உடன் மாஸ்டர் படத்தில் நடித்தவர் சாந்தனு..
இவர் பாக்கியராஜின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சாந்தனு பல்வேறு படங்களில் ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் விஜயின் மாஸ்டர் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார். இப்பொழுது சாந்தனு பல்வேறு புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் இவர் அருண் விஜய் நடிப்பில் உருவான சினம்.
படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சாந்தனு கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் அருண் விஜய் ரொம்ப பிடிக்கும்.. அவரின் சினிமா வாழ்க்கையை என்னோடு பல இடங்களில் ஒப்பிடிட்டு பார்க்க முடியும் பலரும் அவரை சொல்லியே என்னை ஊக்கப்படுத்தினர் குறிப்பாக விஜய் அண்ணா..
ஒருமுறை அருண் விஜயை பாரு ரொம்ப கஷ்டத்த தாண்டி இன்னைக்கு அவருக்கு என ஒரு இடத்திற்கு வந்திருக்காரு உனக்கும் அதே போல நல்லது நடக்கும் என சொன்னார். நான் மறக்கவே மாட்டேன் அதுவும் விஜய் அண்ணா கொடுத்த அட்வைஸ் என தெரிவித்தார். இச் செய்தி இணைய தளப்பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.