தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் என்றால் விக்ரம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து வந்த வகையில் அவருடைய பாணியில் தற்பொழுது தளபதி விஜயின் ஒரு திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் ஷாருக்கான் நயன்தாரா ஆகியவர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாகவும் இதற்காக ஒரே ஒரு நாள் மட்டும் கால் சீட் ஒதுக்கி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ஆனது மிக விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாகவும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விஜய் இப்படி ஒரு செயலில் ஈடுபடுவார் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை மூட்டி உள்ளது.
ஆனால் சமீபத்தில் தமிழ் நடிகரின் திரைப்படத்தை விட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது விஜய் நடிக்க போகும் இந்த திரைப்படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை என்பது தெரிய வந்த நிலையில் ஷாருகான் மற்றும் அட்லி ஆகிய இருவருடன் இருக்கும் நட்பிற்காக தான் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே தளபதி விஜய் அவர்கள் அக்ஷய் குமார் நடித்த ரவுடி ராத்தோர் என்ற திரைப்படத்தில் கூட ஒரு சிறிய காட்சிகள் இடம் பெற்று இருப்பார். இவர் அந்த திரைப்படத்தை இயக்குனர் பிரபுதேவா இயக்கி இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் தான் விஜய் தென்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.