சினிமா உலகில் ஒரு படம் மிகப்பெரிய தொகை போட்டது எடுத்துவிட்டால் அத்துடன் முடிந்ததாக அர்த்தம் கிடையாது அதற்கு அப்புறமும் பல செலவுகள் இருக்கிறது நாம் இசை வெளியீட்டு விழா படத்தின் பிரமோஷன் என பல செலவு செய்கிறார்கள் அதுவும் பெரிய நடிகர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை..
இசை வெளியீட்டு விழாவிற்கு பல கோடி செலவு செய்வார்கள். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தையே 100 கோடி பட்ஜெட்டில் எடுப்பார். இசை வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்ட செலவு செய்து அசத்துவார் அந்த வகையில் விக்ரம் நடித்த ஐ படத்தை மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில்..
எடுத்ததோடு மட்டுமில்லாமல் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக அர்னால்டு எல்லாம் வந்தார். இதற்காக பல கோடி செலவு செய்யப்பட்டது அதேபோல நண்பன் திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு இசை வெளியீட்டு விழாவை மிக கோலாகலமாக நடத்த முடிவெடுத்தார் குறிப்பாக தளபதி விஜய்காக இசை வெளியீட்டு விழாவில் மிகப்பெரிய ஒரு செட் அமைக்கப்பட்டது.
விஜய் 30 அடி உயர கூண்டிலிருந்து இறங்கி மாஸ் என்ட்ரி கொடுப்பது போல இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் நடிகர் விஜயோ நண்பன் திரைப்படத்தில் நாங்க மூணு பேருமே ஹீரோக்கள் தான் அதனால் ஸ்ரீகாந்த், ஜீவா எப்படி என்ட்ரி கொடுப்பார்களோ அதே வழியில் நானும் வருகிறேன்.
சிம்பிளாக இருந்தாலும் பரவாயில்லை என கூறிவிட்டாராம்.. இது இயக்குனர் ஷங்கருக்கு அதிர்ச்சியை கொடுத்ததாம் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது விஷயத்தை அறிந்த ரசிகர்கள் விஜய் சினிமாவில் மட்டும் தான் மாஸ் நிஜத்தில் அவர் ஒரு சிம்ப்ளிசிட்டி என கூறி அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.