தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருகிறார் இவர் இதுவரை நடித்துள்ள பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் இவர் தற்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை வம்சி இயக்குகிறார் தில் ராஜு பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டம் வெற்றி கரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு படமாக இருக்கும்..
ஆனால் அதே சமயம் விஜய்க்கு ஏற்றார் போல சில ஆக்சன் மற்றும் காமெடி டான்ஸ் என இடம்பெற்று இருக்கும் என சொல்லப்படுகிறது. வாரிசு படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறதாம்.
வாரிசு படத்திலிருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் உடன் கைகோர்த்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க திட்டமிட்டுள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சென்னையில் ஏற்கனவே விஜய்க்கு பெரிய அளவிலான வீடுகள் இருக்கின்ற நிலையில் தற்பொழுது 35 கோடி மதிப்பில் உள்ள ஒரு பிளாட்டையும் வாங்கி உள்ளாராம் இச்செய்தி தற்போது இணையதளத்தில் பெரிய அளவில் பேசப்படுகிறது அந்த பிளாட்டை ஒரு அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ள அவர் முடிவெடுத்து இருக்கிறாராம்.