தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் முதலில் “மாநகரம்” என்னும் படத்தை எடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன் பிறகு கார்த்தியை வைத்து கைதி, விஜய வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வெற்றி கண்டார்.
இப்பொழுது விஜய் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாக்கி வருகிறது படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. லோகேஷ் படத்தில் பல நடிகர்கள் நடிப்பது பழக்கம்.
அந்த வகையில் மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனு பார்க்கவ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் அந்த கேரக்டர் பெரிய அளவில் பேசப்படவில்லை மேலும் குறைந்த நேரமே அந்த கதாபாத்திரம் இருந்ததால் சாந்தனுவை பலரும் ட்ரோல் செய்தனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சாந்தனு ராவணக்கோட்டம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் அவர் விஜய் பற்றியும், லோகேஷ் கனகராஜ் குறித்தும் பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது.. லோகேஷ் அண்ணன் என்னை ஒரு முறை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். ஆனால் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் என்னால் போக முடியவில்லை..
அதை விஜய் அண்ணாவிடம் ஒரு முறை நேரில் அண்ணா சாந்தனு என் மேல செம்ம கோவத்துல இருக்காருன்னு நினைக்கிறேன் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டா கூட வர மாட்டேங்குறான் என சொன்னாராம் உடனே விஜய் லோகேஷனை பார்த்து நீ பண்ணுன வேலைக்கு உன் வீட்டுக்கு சாப்பிட வர வருவானா என நக்கல் அடித்து சிரிதாரம். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.