தளபதி 66 திரைப்படத்தை இயக்க போகும் மெகாஹிட் இயக்குனர்.!! அய்யய்யோ வேண்டாம் என ரசிகர்கள் புலம்பல்..

thalapathy
thalapathy

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார் இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார் அந்த திரைப்படம் பொங்கல் தின சிறப்புத் திரைப்படமாக வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, பாக்கியராஜ், கௌரி கிஷன், மாஸ்டர் மகேந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தளபதி 65 திரைப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இந்த நிலையில் அடுத்ததாக தளபதி 66 திரைப் படத்தை யார் இயக்கப் போகிறார், தயாரிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்த நிலையில், தளபதி திரைப்படத்தை தயாரிக்கப் போவது மெர்சல் திரைப்படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கஉள்ளார் என தளபதி விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் விஜயின் ரசிகர்கள் அட்லி வேண்டவே வேண்டாம் என சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதற்கு காரணம் அட்லி இதற்கு முன் இயக்கிய திரைப்படங்கள் மற்ற திரைப் படத்தின் காப்பி என பெரும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதற்கு அட்லி இசையில் ஏழு ஸ்வரங்கள் இருப்பதுபோல் படத்திலும் காதல் சண்டை காட்சி பாடல் எமோஷனல் என இருக்குமென ஏதேதோ சொல்லி மழுப்பினார்.

இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை விரைவில் அதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.