விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் ஒரு பக்கம் வசூல் வேட்டை நடத்த மறுபக்கம் எங்கு திரும்பினாலும் தளபதி 67 படத்தைப் பற்றிய பேச்சுக்கள் தான் அதிகமாக இருக்கிறது குறிப்பாக சோசியல் மீடியாவில் தளபதி 67 படத்தைப் பற்றிய பேச்சுக்கள் தான் தினமும் இருக்கின்றன.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அண்மையில் தளபதி 67 படத்தின் பூஜை முடிந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டது.
ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.
மேலும் தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் பல கோடி கொடுத்து கைப்பற்றி இருப்பதாக தெரிய வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
அண்மைக்காலமாக முக்கிய படங்களின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் தட்டி தூக்கி வருகிறது அந்த வகையில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ஆடியோ உரிமையை சுமார் 16 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. தொடங்குவதற்கு முன்பாகவே தளபதி 67 படம் கல்லாகட்டி உள்ளதால் நிச்சயம் இந்த படத்தின் பிசினஸ் வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது.