தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார்.
பிரமாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். விஜயின் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக சொல்லி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது இதை அறிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் ஷூட்டிங்கை பார்க்க குவிய தொடங்கினர். உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போலீசார்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டது மேலும் விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதனால் கோபப்பட்ட விஜய் ரசிகர்கள் போலீசார் தடி அடி நடத்த பட குழுவினர் அனுமதி கொடுத்து தான் இப்படி நடக்கிறது வாசலில் வந்து நின்று கை காட்டினால் கூட அது எங்களுக்கு சந்தோஷம்தான் அதைக் கூட செய்யவில்லை அப்புறம் எதுக்கு எங்களுக்கு தளபதி. அவர் தேவையே இல்லை என ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர் ரசிகர்கள்.
ரஜினி, சூர்யா ஆகியோர்கள் படப்பிடிப்பு நடைபெற்றாலும் ரசிகர்களுக்கு என நேரத்தை ஒதுக்கி அவர்களை சந்தித்து விடுகின்றனர் ஆனால் தளபதி விஜய் வந்தால் மட்டும் ரசிகர்களை இப்படி போலீஸ் அவர்களை விட்டு விரட்டுகின்றனர் எனக் கூறி வருகின்றனர். அவர்கள் பேசிய அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.