பூஜை தொடங்கும் முன் லாபம் பார்த்த தளபதி 67.! குஷியில் ரசிகர்கள்…

thalapathy-67
thalapathy-67

தமிழ் சினிமாவில் நான்கு திரைப்படங்களை இயக்கிய தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தேர்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்,  ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. தளபதி 67 திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் வேலைகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் படம் எடுக்க பட்டு வருகிறது.

மேலும் தளபதி நடித்து வரும் வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது என்ற நிலையில் வாரிசு திரைப்படத்தை விட நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக நடிக்க போகும் தளபதி 67 திரைப்படத்திற்காக தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக நடிக்க போகும் தளபதி 67 திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னம் பூஜை கூட தொடங்காமல் இருக்கும் நிலையில் பல கோடி பிசினஸ் செய்து வசூலில் விக்ரம் திரைப்படத்தை முந்தும் அளவிற்கு கோடிகளை தொட்டு உள்ளது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் உச்சகட்ட சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது தளபதி 67 திரைப்படம் ஃப்ரீ ரைஸ் மட்டுமே 400 கோடி வசூலிக்கும் என ஒரு கருத்துக்கணிப்பு உள்ளது அதனை தொடர்ந்து சேட்டிலைட் உரிமம் என்று தளபதி 67 திரைப்படத்திற்கு  பெரிய வசூலில் லாபம் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்ரம் திரைப்படம் வெளியாகி 470 கோடி வரை வசூல் செய்தது அதை ஓரம் கட்டும் அளவிற்கு தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.