தளபதி பிறந்தநாளை முன்னிட்டு சுத்தியில் ரத்தம் தெறிக்கும் படியான LEO பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

thalapathy-vijay-leo
thalapathy-vijay-leo

தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருப்பவர் இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்பொழுது தளபதி விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் திரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரபிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் லியோ திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனென்றால் வருகின்ற அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியிட்டிற்கு முன்பே OTT  இசை வெளியீட்டு உரிமம் என 350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

ரிலீசுக்கு முன்பே பல கோடி கலெக்ஷன் செய்துள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு பட குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையதளத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இரட்டை விருது கொடுக்கும் வகையில் விஜய் குரலில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பாடலையும் இன்று படக்குழு வெளியிட இருக்கிறது.