இயக்குனர் அட்லி தோல்வியை காணாத ஒரு இயக்குனர் என்ற பெயரை தன் வசப்படுத்தி உள்ளார் இவர் இதுவரை இயக்கிய ராஜா ராணி, பிகில், தெறி, மெர்சல் என அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் தான். மெர்சல் படத்தை தொடர்ந்து தமிழில் படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் கால் தடம் பதித்து ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, தீபிகா படுகோன் மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் நடித்து வருகின்றனர் இந்த படம் முழுக்க முழுக்க ராணுவ கதையை மையமாக வைத்து உருவாக்குவதாக கூறப்படுகிறது. கதையின்படி ஷாருக்கான் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
வயதான அப்பா ஷாருக்கான் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தீபிகா படுகோனும் இளமையான மகன் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஜவான் திரைப்படம் அடுத்த வருடம் ஜூன் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆகும் என பட குழு சொல்லி உள்ளதை எடுத்து ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் முன்னணி நடிகரை நடிக்க வைக்க பட குழு திட்டமிட்டது அதற்காக பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஒரு வழியாக இயக்குனர் அட்லி விஜயை சந்தித்து கதையை கூறியுள்ளார் அவரும் அந்த கேமியோ ரோல் பிடித்துப் போக நடிக்க ஒப்புக்கொண்டார் மேலும் இதற்காக விஜய் ஒரு நாள் கால் சீட் கொடுத்துள்ளார். இதற்க்கு விஜய் சம்பளமும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் சூட்டிங் சென்னையில் நடக்கப்பட இருக்கிறது விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார் விஜய் நடிக்கும் அந்த காட்சியில் கூட ஷாருக்கான் நயன்தாரா போன்றவர்களின் கதாபாத்திரமும் இணைந்து நடிக்க உள்ளனர் என சொல்லப்படுகிறது. அப்படி என்றால் இந்த படத்தில் இந்த சீன் தான் மிகப்பெரிய ஒரு சீனாக இருக்கும் என ரசிகர்கள் இப்பவே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.