முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான தோனி தற்போது சினிமாவில் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக இந்திய அணி வீரர்கள் சினிமாவில் நடிப்பது சகஜம் தான். ஆனால் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து இந்திய மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தோனி.
இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் இவர் தயாரிக்கும் முதல் படமே தளபதி 70 திரைப்படம் தான். அந்த அளவிற்கு தமிழ் சினிமா மீது தோனி அவர்களுக்கு பற்று உள்ளது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து தற்போது ஒவ்வொரு மொழியிலும் ஒரு முக்கிய நடிகர்கள் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தனது தயாரிப்பு நிறுவனத்தை சென்னையில் உள்ள ஈசிஆரில் ஓபன் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்தவுடன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். பொதுவாக விஜய் படம் என்றாலே அவருடைய ரசிகர்கள் விஜய் படங்களை பார்ப்பதற்காக தியேட்டர்களில் ஆரவாரம் செய்வார்கள்.
அப்படி தளபதி 67 திரைப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தளபதி 67 திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைய உள்ளார் நடிகர் விஜய். இதனால் அடுத்தடுத்த திரைப்படங்கள் நடிகர் விஜய்க்கு ஒரு ஹிட் படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னால் கேப்டன் தோனியும் விஜய் அவர்களும் தளபதி 70 வது திரைப்படத்தில் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.