Thalapathy 68 : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் வசூலில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.
லியோ திரைப்படத்தின் கொண்டாட்டத்தில் இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு மேலும் ஒரு கொண்டாட்ட செய்தி வெளியாகியது தளபதி 68 திரைப்படம் குறித்த அட்டகாசமான அப்டேட் வெளியாகியது லியோ திரைப்படத்திற்கு முன்பே தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி கொண்டிருந்தன இந்த திரைப்படத்தில் ஹைலைட்டாக வெங்கட் பிரபு விஜய்யை இயக்குவது தான்.
உடனே லியோ திரைப்படத்தை பற்றி பேசுவதை விட்டுவிட்டு தளபதி 68 குறித்து பேச ஆரம்பித்தார்கள் இதனால் லியோ பட குழு அதிர்ச்சி அடைந்து படத்தின் ரிலீஸ் வரை தளபதி 68 திரைப்படத்தை குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட வேண்டாம் என அதிரடியாக முடிவு செய்து கூறிவிட்டார்கள்.
லியோ திரைப்படம் வெளியாகிய பிறகு தற்போது தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட் களை அள்ளி அள்ளி தெளிக்கிறார்கள் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்த பூஜையில் விஜய் மிகவும் கேஷுவலாக கெத்தாக பங்கேற்றார் மேலும் இந்த வீடியோவில் மைக் மோகன், ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், விடிவி கணேஷ், அஜ்மல் சினேகா, யோகி பாபு, லைலா என அனைவரையும் காட்டினார்கள்.
அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தில் நடித்த மீனாட்சி சவுத்ரி இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார் இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தளபதி 68 திரைப்படத்தில் வெங்கட் பிரபுவின் கேங்க் இடம்பெற்றுள்ளது.
அதாவது வைபவ், பிரேம்ஜி அமரன், அஜ்மல் அமீர் ஆகியோர்கள் இடம் பெற்றுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருக்கிறார் மங்காத்தா திரைப்படத்தில் பணியாற்றிய பலப் பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் இருக்கிறார்கள். மங்காத்தா திரைப்படத்தில் வெங்கட் பிரபு தனது கேங்கை வைத்து அட்டகாசம் செய்தது அதேபோல் இந்த திரைப்படத்திலும் வெளுத்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் பூஜை வீடியோவின் ஹைலைட்டாக யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருந்தது தளபதி 68 அப்டேட் வெளியானதால் விஜய் ரசிகர்கள் இரண்டு மடங்கு கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
Some moments are truly special #Thalapathy68 Poojai was one such day that had so much positivity, hope and lots of laughter 2024 belongs to us ❤️ @actorvijay Sir ⁰#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram https://t.co/GgYjQPVDwV
— Archana Kalpathi (@archanakalpathi) October 24, 2023