Thalapathy 68: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது எனவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.
இதனை அடுத்து தளபதி 68வது படத்தினை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் மேலும் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
எனவே இவர்களுடைய கூட்டணியில் இரண்டாவது முறையாக லியோ உருவாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். மொத்த படப்பிடிப்பும் முடிந்திருக்கும் நிலையில் விரைவில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. லியோ படத்தின் ரிலீஸ்க்கு பிறகு தளபதி 68வது படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.
தளபதி 68 படத்தின் மூலம் முதன்முறையாக வெங்கட் பிரபு விஜய் கூட்டணி இணைய இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். அதன்படி தளபதி 68 படத்தின் பூஜை செப்டம்பரில் நடைபெறும் எனவும் அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்புகளில் விஜய் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியானது.
இதனை அடுத்து இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், முக்கிய கேரக்டரில் பிரியங்கா மோகனும் நடிக்க இருக்கின்றனர்.
இதனை அடுத்து தளபதி 68ல் விஜய்க்கு மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறதாம் எனவே பிரபுதேவா, மாதவன் இருவரும் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக விஜய்க்கு பிரபுதேவா கொஞ்சம் ஸ்பெஷல்.
இவர்களுடைய கூட்டணியில் வெளியான போக்கிரி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இதுவரையிலும் மாதவன் விஜய் காம்போ பார்த்தது இல்லை இதனை தளபதி 68ல் எதிர்பார்க்கலாம். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.