தளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் காஷ்மீரில் தொடங்கப்பட்டது பின்பு காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்த பிறகு தற்போது சென்னையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் உடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிய இருக்கிறது அதன் பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களை ஓரளவு கவர்ந்தது இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் 50% விஜய் திரைப்படமாகவும் 50 சதவீதம் லோகேஷ் கனகராஜ் திரைப்படமாகவும் வெளியானது ஆனால் லியோ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் வெளியாகும் என தகவல் கிடைத்தது.
இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் மெகா ஹிட் அடித்து வசூலில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இந்த நிலையில் விஜய் அடுத்ததாக யார் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் தற்போது விஜய் வெங்கட் பிரபு இருவரும் கூட்டணி சேர இருக்கிறார்கள்.
லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்பொழுது வீடியோ உடன் தளபதி 68 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
Dreams do come true ❤️ God is kind 🙏🏼🙏🏼🙏🏼 #Thalapathy68 @Ags_production #KalpathiSAghoram @actorvijay @thisisysr @archanakalpathi @Jagadishbliss @aishkalpathi @venkat_manickam @onlynikil @RIAZtheboss pic.twitter.com/lgE3gz4bxe
— venkat prabhu (@vp_offl) May 21, 2023
வெங்கட் பிரபு விஜய் இணையும் இந்த திரைப்படத்தினை அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு 2024 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டில் தளபதி 68 திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.