Thalapathy 68: வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தளபதி 68 படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தினை லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஸ்கின், கௌதம் மேனன், அனுராக் காஷ்யாப், பிரியா ஆனந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
தொடர்ந்து லியோ அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி அன்று சென்னை நேரு உன் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அன்றே ட்ரெய்லரும் ரிலீஸ் செய்ய படக் குழு முடிவு எடுத்து உள்ளார்களாம்.
இவ்வாறு ப்ரோமோஷன் பணிகளை முடித்துவிட்டு வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. லியோ திரைப்படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
முதன் முறையாக வெங்கட் பிரபு, விஜய் கூட்டணி இணைந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைக்க உள்ளார். தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் விஜய்க்கு சினேகா ஜோடி எனவும் இளம் வயது விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இதனை அடுத்து சமீபத்தில் விஜய்யும் வெங்கட் பிரபுவும் அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்பட்டு அதனை பகிர்ந்த வெங்கட் பிரபு எதிர்காலத்துக்கு வருக என்று கூறினார். இவ்வாறு தளபதி 68 குறித்த அப்டேட் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை கடந்த ஜூன் மாதமே நடந்திருக்க வேண்டியதாம். ஆனால் தள்ளி வைக்கப்பட்டதனால் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் லியோ படத்தின் பூஜை போடப்பட்டு கையோடு சூட்டிங் நடத்த படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.