Thalapathy 68: வெங்கட் பிரபு தளபதி 68 படத்தின் சில நிமிட காட்சிக்காக பல கோடி செலவு செய்வதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது இந்த படத்திற்கு ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் குறிப்பாக இளம் வயது கேரக்டருக்காக சமீபத்தில் இவர் அமெரிக்கா சென்று தனது இள வயது காட்சிக்காக தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
அப்படி தனது உருவத்தை முழுவதும் ஸ்கேன் செய்து De-Aging டெக்னாலஜி மூலம் அவரை இளமையாக காண்பிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. எனவே தளபதி 68 படத்தில் விஜய் சில நிமிடங்கள் மட்டுமே இளமையான காட்சிகளில் தோன்ற இருக்கும் நிலையில் அதற்காக மட்டுமே ஆறு கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தக்கட்ட பட படிப்புக்காக பட குழுவினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. மேலும் விஜய் உடன் இணைந்து சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், இவனா நடித்து வருகின்றனர். பொதுவாக இயக்குனர் சங்கர்தான் சில காட்சிகளுக்கே பல கோடி செலவு செய்வார் இவருக்கு அடுத்ததாக தற்பொழுது வெங்கட் பிரபுவும் தளபதி 68 படத்தில் சில நிமிட காட்சிக்காக பல கோட்டி செலவு செய்கிறார்.