தளபதி 68 திரைப்படத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது கலக்கி வரும் பிரபல முன்னணி நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இவ்வாறு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு விரைவில் முடிய இருப்பதாகவும் கடைசி கட்டப்பட பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விஜய் யாருடன் கூட்டணி சேர உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதற்கான நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். அந்த வகையில் தளபதி 68 திரைப்படத்தினை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடைசியாக யுவன் சங்கர் ராஜா விஜஙயின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்திருந்தார் இவ்வாறு கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் யுவன் சங்கர் ராஜா விஜய் உடன் இணைந்துள்ளார். இந்நிலையில் தளபதி 68 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து தளபதி விஜய்யன் பிறந்த நாள் ஜூன் 22ஆம் தேதி என்பதால் தளபதி 68 படத்திற்கு பூஜை போட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பல நடிகைகள் நடிப்பதாக தொடர்ந்து ஏராளமான நடிகைகளின் பெயர் வெளியாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தளபதி 68 பாடத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து இதுவரையிலும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் தற்பொழுது கமலுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இதனை அடுத்து அருள் நிதியுடன் இணைந்து டிமான்டி காலனி 2 படத்திலும் நடித்த பிசியாக இருந்து வரும் நிலையில் வெங்கட் பிரபு தளபதி 68யில் பிரியா பவானி சங்கரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.