தளபதி 68- விஜய்க்கு நோ சொன்ன ஜோ.? தன்னுடன் ஆறு முறை நடித்த நடிகையுடன் ஜோடி போடும் தளபதி.! இது என்னடா புது கதையா இருக்கு இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..

thalapathy 68 actress

Thalapathy 68 : தளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் டப்பிங் பணிகளும் நடைபெற்று வந்தது தன்னுடைய டப்பிங் பணியை விஜய் முடித்த நிலையில் அடுத்ததாக தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கி விட்டார்.

தமிழ் சினிமாவில் முதன்முறையாக தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது ஏற்கனவே இந்த திரைப்படத்தை பற்றிய பல தகவல்கள் சமூக வலைதளத்தில் கசிந்து கொண்டே இருக்கின்றன இந்தத் திரைப்படத்திற்கான அனிமேஷன் பணிகள் வெளிநாட்டில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

தளபதி 68 திரைப்படம் தந்தை மகன் என இரு கதாபாத்திரங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இளைய விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது முதலில் அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார் ஆனால் திடீரென வேறொரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அவர் வேறு யாரும் கிடையாது ஏற்கனவே தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்த சிம்ரன் தான் இவர் உதயா, ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, என ஆறு திரைப்படங்களில் நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய் முதன்முறையாக 200 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது அதற்கு காரணம் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கிய மாபெரும் வெற்றி கொடுத்துள்ளார் அதேபோல் இந்த படமும் லோகேஷ் கனகராஜ் சாயலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

simran
simran