தளபதி 68 திரைப்படத்திற்காக பணத்தை வாரி வாரி இறைக்க போகும் தயாரிப்பாளர்.! இயக்குனர் யார் தெரியுமா…?

vijay
vijay

நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாரிசு திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம்  தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக குறிப்பிடுகிறது.

ஆனால் தீபாவளி அன்று வாரிசு திரைப்படத்திலிருந்து சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இவர்கள் இருவரும் தளபதி 67 திரைப்படத்தில் இணைய உள்ளனர் இந்த திரைப்படம் லோகேஷ் சினிமா டிக்கில் இணையுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கைதி, விக்ரம், தளபதி 67, ஆகிய மூன்று படங்களும் ஒன்றாக இணையுள்ளதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த மூன்று படங்களும் ஒரே திரைப்படமாக உருவாக உள்ளதால் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 67 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் அவர்கள் அட்லீ கூட்டணியில் இணை உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. என்னதான் காப்பி அடிக்கப்பட்ட திரைப்படங்களாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து அட்லி மற்றும் விஜய் இருவரும் நான்காவது முறையாக கூட்டணி செர்கின்றனர் இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு பலத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி 68 படத்தை பிரபல தயாரிப்பு நிர்வாணமான மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தளபதி 68 படத்தை தயாரிக்கப்படுகிறது இதற்காக முன்கூட்டிய அட்வான்ஸ் தொகையையும் விஜய்க்கு கொடுத்துள்ளதாக தகவல் வழியாக உள்ளது.