வெங்கட் பிரபுவுக்கு GOAT அப்டேட் கொடுத்த விஜய் ரசிகர்கள்.! என்ன சாரே சும்மா தெறிக்கிதா..

Thalapathy 68 Goat
Thalapathy 68 Goat

Thalapathy 68 Goat fan made poster : தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் இதன் டைட்டிலை சமீபத்தில் பிரம்மாண்டமாக அறிவித்தார்கள். கடந்த நியூ இயர் ஸ்பெஷலாக தளபதி 68 டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் வைரலானது அது மட்டும் இல்லாமல் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியது.

படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டில் வைத்துள்ளார்கள் அதே போல் நியூ இயருக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து செகண்ட் லுக் போஸ்டரும் வெளியானது. போஸ்டரை பார்த்த ரசிகர்கள் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதை உறுதி செய்தார்கள்.

ராமராஜன் இயக்குனராக ஹிட் கொடுத்த படங்கள் இத்தனையா.? லிஸ்ட் பெருசா போகுது

கோட் திரைப்படத்தின் இரண்டு விஜயின் லுக் ரசிகர்களிடையே வைரலானது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் தளபதி 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே ரெடியாகிவிட்டதாக அப்டேட்டை வெளியிட்டார் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகும் என ஹாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதாவது ரசிகர்கள் தளபதி 68 திரைப்படத்தின் ஃபேன் மேட் போஸ்டரை கிரியேட் செய்து வெளியிட்டுள்ளார்கள் இதை பார்த்த வெங்கட் பிரபு நைஸ் ப்ரோ என கமெண்ட் செய்துள்ளார்.

விஜயகாந்த் மறைவிற்கே போகல.. கலைஞர் 100 விழாக்கு போன அவ்வளவுதான் என வர மறுத்த நடிகர்கள்..!

வெங்கட் பிரபு கோட் திரைப்படத்திலிருந்து அப்டேட்டை விஜய் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். ஆனால் தற்பொழுது ரசிகர்கள் வெளியிட்ட ஃபேன் மேட் போஸ்டரை பார்த்து சிலாக்கித்துள்ளார் மேலும் தளபதி 68 திரைப்படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, இவானா, யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கிறார்கள்.

தளபதி 68 திரைப்படம் சயின்ஸ் பிக்க்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது எனவும் இது கமர்சியல் திரைப்படமாகவும் இருக்கும் எனவும் தகவல் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.