சினிமா உலகமே கொண்டாடும் ஒரு முக்கிய திரை பிரபலம் தளபதி விஜய். இவர் தொடர்ந்து அவரது ரசிகர்களை கவரும்படியான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பாராத வசூலை ஈட்டியது.
இதைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் முன்னதாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படமும் அதிரி புதிரி ஹிட் அடித்தால் இந்த படமும் விஜய் கேரியரில் ஒரு வெற்றி படமாக மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை…
லியோ படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இது இப்படி இருக்க மறுபக்கம் விஜயின் அடுத்த படம் குறித்த தகவலும் சில சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதன்படி தளபதி விஜய்யின் அடுத்த படமான அதாவது 68 வது திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகின்றன. இதனிடையே இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில் திரிஷா தான் இந்த படத்திலும் விஜய்க்கு ஜோடி என ஒரு பக்கம் கூறி வந்தனர்.
ஆனால் இப்போது கிடைத்த தகவல் என்னவென்றால் தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் நடிக்கப் போவதாக கூறப்படுகின்றன. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.