தளபதி விஜய் கடைசியாக வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியானது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானது இந்த இரண்டு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியானதால் ரசிகர்களுக்கு இரண்டு மடங்கு கொண்டாட்டத்தை கொடுத்தது.
இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இது லோகேஷ் யுனிவர்ஸ் திரைப்படமாகவும் அமையும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டை சமீபத்தில் பட குழு வெளியிட்டது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற அறிவிப்பையும் சமீப காலமாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர்கள் நடிக்க இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்க இருக்கிறார் விஜயுடன்.
மேலும் தளபதி 67 திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்து வருகிறார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது முழுக்க முழுக்க இது கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள் ஏனென்றால் இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் அவர்கள் எடுத்த ஒவ்வொரு திரைப்படமும் வெற்றியடைந்துள்ளது. அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பட குழு வெளியிட்டுள்ளது இந்த பூஜையில் ஆக்சன் கிங் அர்ஜுன், திரிஷா, விஜய், லோகேஷ் கனகராஜ் சாண்டி மற்றும் படத்தில் டெக்னீசியன்ஸ் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இதனை பட குழு வெளியிட்டு “என்ன அப்படியே கிளம்பிடுவேன்னு நினைச்சீங்களா.? திரும்பி போறவங்க இல்ல நண்பா, திரும்பி கொடுக்கறவங்க” என வசனத்தை ட்விட்டரில் பதித்துள்ளார்கள்.
Enna apdiye kelambirvom nenacheengala? 😉
Thirupi poravanga ila nanba, thirupi kudukuravanga 🔥#Thalapathy67Poojai exclusive stills are here 🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay pic.twitter.com/LrL3YZshhJ— Seven Screen Studio (@7screenstudio) February 1, 2023