பிரமாண்டமாக வெளியானது தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில்.! அடேங்கப்பா இப்படி ஒரு டைட்டிலா…

thalapathy 67
thalapathy 67

தனது நடிப்பு திறமையின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கட்டி இழுத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் கடைசியாக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கூட்டணி அமைத்து நடித்த வாரிசு படம் கடந்த பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

வழக்கம் போல முதலில் ரசிகர்கள் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நிலையில் ஒரு வாரம் குடும்ப ஆடியன்ஸும் வாரிசு படத்தை கொண்டாட ஆரம்பித்தனர் அதன் விளைவாக உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது இதுவரை மட்டுமே 280 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சந்தோஷமடைந்த வாரிசு படக்குழு ஹைதராபாத்தில் மிகப்பெரிய ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடியது இதில் நடிகர் விஜயும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க ரெடியாகி உள்ளார்.

இதுவரை தோல்வியை சந்திக்காத இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளதாள். இதில் விஜய் உடன் இணைந்து ப்ரியா ஆனந்த, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா மற்றும் பல  முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த படம் மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த சில தினங்களாக தளபதி 67  படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தளபதி 67 படத்தின் டைட்டில் குறித்து தகவல்கள் வெளியாகும் என படக்குழு சொன்னது அதேபோல தற்பொழுது டைட்டில் வெளிவந்து உள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு டைட்டிலாக லியோ LEO என வைத்துள்ளார்கள் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிவேகமாக வைரலாகி வருகிறது.