தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படம் என்னதான் லோகேஷ் திரைப்படமாக இருந்தாலும் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் உருவாகவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது அதனால் முழுக்க முழுக்க லோகேஷ் திரைப்படமாக வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள்.
அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படத்தில் நாயகிகள் இல்லாமலும் பாடல் இல்லாமலும் உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது அதுமட்டுமில்லாமல் இதனை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழுவே படப்பிடிப்பு தொடங்கியதை அறிவித்தது மேலும் படப்பிடிப்பில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் படத்தில் யார் யார் இணைந்துள்ளார்கள் என்பதையும் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய twitter பக்கத்தில் அறிவித்திருந்தது பட குழு.
அந்த வகையில் திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். அதனால் இந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது அதற்கு காரணம் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் நாளை வெளியாக இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் இந்த திரைப்படத்தின் டைட்டிலை ரசிகர்கள் இப்பொழுதே கணிக்க தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் பொதுவாக லோகேஷன் படங்களின் டைட்டில் ஓன்று ஹீரோவின் பெயராக இருக்கும் இல்லை என்றால் ஹீரோவை சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி இருக்கும்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி மாஸ்டர் விக்ரம் ஆகிய திரைப்படங்களை பார்த்தாலே அனைவருக்கும் புரிந்து விடும் அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இந்த திரைப்படத்திற்கு கேங்ஸ்டர் என பெயரிட அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கணித்துள்ளார்கள் இருந்தாலும் நாளை மாலை 5 மணிக்கு தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் என்ன என்பது உறுதியாக தெரிந்துவிடும்.